2025-ல் புதிய விதிகளை அறிவித்த கனடா!

06.01.2025 07:51:37

கனடாவில் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ட்ரோன் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் ட்ரோன் தொழில்துறை 2025-ஆம் ஆண்டு புதிய விதிகளால் புதிய பரிமாணங்களை அடையவுள்ளது. டிரான்ஸ்போர்ட் கனடா அறிமுகப்படுத்த உள்ள புதிய விதிகள், ட்ரோன் பைலட்டுகளுக்கு நீண்ட தூரத்தில் ட்ரோன் பறக்க விடுவதற்கான கட்டுப்பாடுகளை சுலபமாக்குகின்றன.

இதனால் தொழில்துறை விரைவாக வளர்ந்து பரந்த விண்வெளியில் ட்ரோன்கள் பறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

BVLOS (Beyond Visual Line of Sight) எனப்படும் விதிகள், பைலட்டின் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் ட்ரோன்களை பறக்க விட அனுமதிக்கின்றன.

இதனால் கனடாவின் தொலைதூர பிரதேசங்களில் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வேகமாக வழங்கும் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படலாம்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு BVLOS பறப்புக்கும் தனித்தனியாக அனுமதி பெற நேர்ந்தது. ஆனால், புதிய விதிகலால் இதை ஒழிக்க முயற்சி செய்யப்படுகின்றன. இது துறையின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களில் பணியாளர்களின் செயல்பாடுகளை ட்ரோன்கள் எளிதாக்க முடியும். வேளாண்மை துறையில், தொலைநிலையில் இருந்து பயிர்கள் பரிசோதிக்கவும், கீற்றுகளை தெளிக்கவும் ட்ரோன்கள் உதவலாம்.

மேலும், மருத்துவ உதவிகளை தொலைதூர பகுதிகளில் கொண்டு செல்ல, குறிப்பாக சிக்கலான வானிலை நிலவரங்களில், இந்த விதிகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

புதிய விதிகள், ட்ரோன்களை விமானங்களுடன் ஒப்பிடும் விதமாக பரிசோதனை மற்றும் பாதுகாப்பு கருத்துகளை உள்ளடக்கியவையாக இருக்கும். இதனால் ட்ரோன் பயன்பாட்டின் நம்பகத்தன்மை மேம்படும்.

2025-ல் வரும் இந்த விதிமுறைகள், தொழில்துறைக்கும் சமூகத்திற்கும் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.