கம்போடியாவில் இராணுவ தளத்தில் பயங்கர வெடி விபத்து
கம்போடியாவில் இராணுவ தளத்தில் இடம்பெற்ற பயங்கர வெடி விபத்தில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான, கம்போடியாவின் கம்போங் பியூ மாகாணத்தில் மிகப்பெரிய இராணுவ தளம் அமைந்துள்ளது.
இந்த இராணுவ தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தில் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
வெடி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரிவரவில்லை.
இந்த வெடிவிபத்தையடுத்து, தான் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்த, பிரதமர் ஹன் மேனட், உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்கும் எனவும் உறுதியளித்தார்.