இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி - இந்தியா நடவடிக்கை
13.03.2022 07:03:07
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய எக்ஸிம் வங்கி இந்த கடன் தொகையை வழங்கவுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ள கடன் தொகையிலிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள முதலாவது எரிபொருள் தொகை செவ்வாய்கிழமை கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் இந்திய எக்ஸிம் வங்கி 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தினை கைசாத்திட்டது.