60,000 இலவச பீட்சாக்களை வழங்கும் Dominos.

02.07.2026 14:40:00

Dominos நிறுவனம் 60,000 பீட்சாக்களை இலவசமாக வழங்க உள்ளது. 2026 பிபா கால்பந்து உலக கிண்ணம் ஜூன் 11 ஆம் திகதி தொடங்கி மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் அமெரிக்க அணியை சேர்ந்த வீரர்கள் ரெட் கார்டு பெற்றால், அமெரிக்க ரசிகர்களின் சோகத்தை போக்க 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) மதிப்பிலான 60,000 பீட்சாகளை இலவசமாக வழங்குவதாக பிரபல பீட்சா நிறுவனமான டோமினோஸ் (Dominos) கடந்த மே மாதம் அறிவித்தது.

    

 

நேற்று நடைபெற்ற போஸ்னியா அணிக்கு எதிரான போட்டியில், அமெரிக்க வீரர் ஃபோலாரின் பாலோகன் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும், 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று, 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்அவுட் சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த சலுகையைப் பெற விரும்பும் அமெரிக்க ரசிகர்கள், டோமினோஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் ஜூன் 10 ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும், டோமினோஸின் ரிவார்ட்ஸ் திட்டத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இதே போல் மீண்டும் ரெட் கார்டு வாங்குங்கள் எங்களுக்கு இலவச பீட்சா கிடைக்கும் என அமெரிக்க வீரர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.