“ஆதாரங்களை அழிக்க சாந்தி 25 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்” .

26.09.2026 15:37:37

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜாமீன் கிடைத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அகதிகளை விட மோசம்".. 8 ஆண்டுகளாக தகர கொட்டகையில் வாழும் கோவை தூய்மை பணியாளர்கள்! வீரமணி புயலில் யார் அந்த கருப்பு ஆடு? ஸ்டாலினுக்கு மட்டும் இது தெரிஞ்சிருந்தா விட்டிருக்கவே மாட்டார் “அமைச்சர்கள், MLAக்களின் வங்கி கணக்குகளை முதல்வர் கண்காணித்து வருகிறார்”- அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, மகேந்திர சிம்ஹன் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 29 ஆம் தேதி இருவரின் ஜாமீன் மனுக்கள் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. தொழிலதிபர் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி மற்றும் அவருடைய கணவர் மகேந்திரன் சிம்ஹன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் நெருங்கும் நிலையில் இதுவரை எங்களை காவலில் வைத்து விசாரிக்க கோரி காவல் துறை மனு தாக்கல் செய்யாததாலும், ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு விட்டதாலும் தொடர்ந்து தங்களை சிறையில் அடைத்து வைத்திருக்க அவசியமில்லை என்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி இருந்தனர். இந்த மனுவிற்கு எதிராக காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க சாந்தி வீரமணியிடம் 25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை தடயவியல் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண வேண்டியுள்ளது. இவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் சாட்சிகளை கலைக்கவும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்பு உள்ளது. மேலும் வெளிநாட்டிற்கும் இவர்கள் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே இரண்டு பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.