பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா?

19.05.2022 10:50:39

நடிகை நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார்.  சமீபத்தில் அவர் மலையாளத்தில் நடித்திருக்கும் ஜோ ஜோ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகிலா ஊடகத்திடம் பேசியபோது கூறியதாவது, பசுவை வெட்டக்கூடாது என்பது தற்போது வந்திருக்கும் நடைமுறை. அது ஒரு பிரச்சினை இல்லை. விலங்குகளை வெட்டக்கூடாது என்றால் எந்த விலங்கையும் வெட்டக்கூடாது.

பசுவுக்கு என்று தனித்துவமாக எதுவும் இல்லை. வெட்டலாம் என்றால் அனைத்தையும் வெட்டலாம். பசுவை மட்டும் வெட்டக்கூடாது, கோழியை வெட்டலாம் என்றால் அது எந்தவகையில் நியாயம். கோழி பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்தானே. பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா. அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிடக்கூடாது. முழுமையான சைவமாக மாற வேண்டும். நான் அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் சாப்பிடக்கூடாது என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.