கூறு போட்டு மூன்று நாடுகளுக்கு விற்கப்படும் இலங்கை
இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு இலங்கை தேவை அந்த நாடுகளுக்கு நாட்டை தேசிய கட்சிகள் கூறுபோட்டு விற்று அதனூடாக கிடைக்கப் பெறுகின்ற தரகு பணத்தில் நடத்துகின்ற அரசியல் தான் காணப்படுகின்றது.
எனவே இந்த நாட்டை காப்பாற்ற மக்கள் ஒரு போராட்ட மத்திய நிலையத்தை உருவாக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என முன்னனி சோசலிச கட்சியின் உறுப்பினரும் சமஉரிமை இயக்கத்தின் ஒருங்கமைப்பாளருமான தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒவ் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜோன் கொத்தலாவ சட்டமூலத்தை கிழித்தெறியும் சட்டத்துக்கு அமைவாக நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தை நசுக்கும் முகமாக எங்களுடன் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள், மாணவர்கள், தாய்மார்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கைது செய்து பெண்களின் ஆடைகளை கிழித்து வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.