
தனுஷ் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்
23.10.2021 06:11:00
முண்டாசுபட்டி மூலம் கவர்ந்த இயக்குனர் ராம்குமார், ராட்சசன் படம் மூலம் முன்னணி இயகுனர் ஆனார். அந்த படத்துக்கு பின் தனுஷை இயக்க இருப்பதாகவும் சத்யஜோதி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
ராட்சசன் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ராம்குமார் தனுஷிற்காக காத்திருக்கிறார். ஆனால் தனுஷ் மற்ற கமிட்மெண்டுகளில் பிசியாக இருக்கிறார். எனவே அதுவரை தனுஷிற்காக காத்திருக்காமல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.