ஒருவழியா டிரெய்ன் ரிலீஸ் தேதி வந்துடுச்சி!.

15.10.2026 08:05:48

பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ, முகமுடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் மிஷ்கின். கோலிவுட்டில் வித்தியாசமான கோணத்தில் திரைப்படங்களை இயக்கி வருபவர் இவர். மிஷ்கினின் படங்களுக்கென பெரிய ரசிகர் கூட்ட உண்டு.
 

ஆண்ட்ரியாவை வைத்து மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய டிரெய்ன் ஆகிய படங்கள் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கிறது. இதுபற்றி மிகவும் வருத்தப்பட்டு மிஷ்கின் பேட்டிகளில் சொல்லி வந்தார். இனிமேல் படங்களை இயக்கவே வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகவும் வேதனையோடு கூடியிருந்தார்.

இந்நிலையில்தான் டிரெய்ன் திரைப்படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான போஸ்டரை அவரே தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். அடுத்து பிசாசு 2 படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.