புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன!

31.03.2026 08:26:57

2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நேற்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.