ஆறு ஆண்டு நிறைவு: கிளிநொச்சியில் ஆர்ப்பட்டம்

21.02.2023 10:32:35

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, ஆறாவது ஆண்டு  நிறைவை முன்னிட்டு கிளிநொச்சியில்  ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்,  2017ஆம் ஆண்டு மாசி மாதம் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஆறு ஆண்டு நிறைவடைந்த நிலையில், போராட்டம் ஆரம்பித்த இடமான கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து டிப்போ சந்தி வரை  பேரணி இடம்பெற்றது.