அன்பு மகளே வெல்லட்டும் உன் லட்சியங்கள் என லாஸ்லியாவை இயக்குனர் சேரன்வாழ்த்தியுள்ளார்

18.09.2021 11:31:22

லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

 லாஸ்லியா, ஹர்பஜன்சிங்,அர்ஜுன், சதீஷ் என மிகப் பெரிய பட்டாளமே இதில் நடித்திருக்க இந்த படத்தை ஜே பி ஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரித்திருந்தனர்.

 கல்லூரி கதைகளை மையமாகக் கொண்டு த்ரில்லர் படமாக வெளியான ஃப்ரெண்ட்ஷிப் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியாவை அன்பு மகளே வெல்லட்டும் உன் லட்சியங்கள் என இயக்குனர் சேரன் வாழ்த்தியுள்ளார்.