பொலித்தீனால் உற்பத்தி செய்யப்படும் 7 பொருட்களை தடை செய்ய திட்டம்!
ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்த்திக் மற்றும் பொலித்தீனால் உற்பத்தி செய்யப்படும் 7 வித பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவை பத்திரம், நாளை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய, பிளாஸ்திக்கினால் உற்பத்தி செய்யப்படும் குளிர்பான குவளைகள், இடியப்ப தட்டு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்கினால் தயாரிக்கப்படும் மலர் மாலைகள் உள்ளிட்ட 7 வித பொருட்கள் அவற்றில் உள்வாங்கப்பட்டுள்ளன
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் செசே பக்கட் உள்ளிட்ட ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதேநேரம், மைக்றோன் அளவு குறைந்த லஞ்சீட் வகைகள் கடந்த முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்டிருந்தன.
வருடாந்தம், நாட்டில் 2 கோடி பொலித்தீன் பைகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.