மிருகங்களுக்கு உணவான 24,000 கிலோ கிராம் அப்பிள்

11.06.2022 06:08:38

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட  24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்துக்கு அமைய மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம், அவை கையளிக்கப்பட்டன.