அனிருத் - காவ்யா திருமணம்.. மோடி, விஜய், .பங்கேற்பு.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கிரீஸ் நாட்டில் நெருங்கிய சொந்தங்கள் சூழ நவம்பர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ், அஜித் குமார், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரை உலகப் பிரபலங்களும் கிரிக்கெட் பிரமுகர்களும் இதில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.
நீல மற்றும் வெள்ளை நிறத்திலான அழகிய மரப்பெட்டி வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரவேற்புப் பத்திரிகையின் வடிவமைப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. எனினும், இது குறித்து அனிருத் அல்லது காவ்யா குடும்பத்தினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.