ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களை வாழ வைத்தார்!

10.04.2024 15:17:26

பொருளாதார நெருக்கடியில் இருந்து  நாட்டை மீட்டு மக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழவைத்துள்ளார்” என சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் சாவாலை ரணில் அன்று ஏற்றுக்கொண்டார்.  நாடாளுமன்றத்தில் தனி ஆசனத்தை பெற்ற ரணில் விக்கிரமசிங்க அந்த சவாலை ஏற்று மக்களை வாழவைத்தார். கடந்த 23 மாதங்களில் நாட்டை முந்தைய பொருளாதார நிலைக்கு கொண்டு வர அவரால் முடிந்தது.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்
இன்று நாடு எந்த நிலையில் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில்
இன்று விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் எதிர்க் கட்சியினர் ஏன் அன்று அந்த சவாலை ஏற்கவில்லை என்று நான் கேள்வி கேட்கின்றேன்.

அந்த அந்தக் குழுவினருக்கு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு நடைமுறை பொருளாதாரம் தெரியாது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காக பேசும் எந்த கட்சியும் இவ்வளவு சம்பள உயர்வை எவருக்கும் வழங்கவில்லை” இவ்வாறு ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.