டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
ல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவின் நிதிக் குற்றவியல் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையிலேயே கைது செய்துள்ளப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தியாவின் நிதிக் குற்றவியல் பிரிவு பல முறை அழைப்பு விடுத்தது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தான் ஏற்கனவே அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது.
தன்னை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே நிதிக் குற்றவியல் பிரிவு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.