மேலும் சில மணிநேரங்கள் இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு தாமதம்

23.03.2021 08:56:11

 

ஐ.நா. அமர்வில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இன்னும் சில மணி நேரம் தாமதமாகும் என ஜெனீவா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்நிலையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.