அரசுக்கு சுதந்திரக்கட்சி பூரண ஆதரவு

08.06.2022 10:10:34

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட போது, நாட்டில் சர்வ கட்சியொன்றை உருவாக்கினால் மாத்திரமே தாங்கள் உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

எனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.