ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

14.10.2021 10:33:58

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா இரண்டு 50 இலட்சம் ரூபா பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று (14) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.