லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துகிறது – தாய்வான்

12.01.2022 05:22:08

லிதுவேனியாவை சீனா கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள தாய்வான் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒற்றுமை அவசியம் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

தாய்வான் வெளியுறவு அமைச்சு லிதுவேனியாவில் தனது நாட்டின் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு அனுமதி அளித்தமையானது ஐரோப்பாவுடனான உறவுகளில் ஒரு திருப்புமுனையாக உள்ளது எனவும் பாராட்டைப் பெறுவதாக தைபே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிதுவினியாவில் தாய்வானின் பிரதிநிதி அலுவலகம் திறக்கப்பட்டது.

இதுகுறித்து லிதுவேனியன் ஜனாதிபதி நௌசேடா உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘தாய்வான் அலுவலகத்தைத் திறந்தது தவறு எனவும் நான் நினைக்கிறேன் என்று கூறியதாக புனையப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

லிதுவேனியா மீது அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை பிரயோகிக்க கேவலமான வழிமுறைகளை சீனா பயன்படுத்தியதற்காக தாம் கடுமையாக கண்டிக்கின்றோம் என்று தயர்வானின் செய்தித் தொடர்பாளர் ஜோன் ஓவ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நாடுகளின் ஒற்றுமை ஒரு சர்வாதிகார ஆட்சியின் கொடுமைக்கு எதிராக வெற்றி பெறும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெய்ஜிங்கின் அழுத்தத்திற்கு அடிபணியாது ஜனநாயகம், சுதந்திர வர்த்தகம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை மதிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் தம்முடன் கைகோர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

லிதுவேனியாவிற்கு எதிராக சீனா பழிவாங்கும் வகையில் விதித்த தடைகளை மீறி, தாய்வான் தனது புதிய பிரதிநிதி அலுவலகத்தை பால்டிக் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.

அந்த பிரதிநிதி அலுவலகத்தில் ‘தாய்வானியர்களை’ அனுமதிக்கும் லிதுவேனியாவின் முடிவுக்கு சீனா கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளது.

அத்துடன், தாய்வானின் பிரதிநிதி அலுவலகத்தை திறப்பதற்கு அனுமதிப்பது என்ற லிதுவியாவின் முடிவைத் தொடர்ந்து அந்நாடு சீனாவிடமிருந்து அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

புதிய அலுவலகம், தாய்வான் மற்றும் பால்டிக் மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவதுடன், அந்நாட்டில் உள்ள தாய்வான் குடிமக்களுக்கு சேவை செய்து பாதுகாக்கும் பொறுப்பை உடனடியாக அமுலுக்கு கொண்டு வரும் என்று ஃபோக்கஸ் தாய்வான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வான், சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 24 மில்லியன் மக்களைக் கொண்ட ஜனநாயகமாகும். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தனித்தனியாக ஆளப்பட்ட போதிலும், ‘தாய்வானின் சுதந்திரம்’ என்றால் ‘போர்’ என்று சீனா மிரட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.