விசேட புகையிரதங்கள் சேவையில்

12.06.2022 09:36:45

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.


 
இன்று அதிகாலை 12.40 மற்றும் இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

13 ஆம் திகதி அதிகாலை 3.30, மதியம் 12.40, மாலை 04.40, மாலை 06.00 மற்றும் இரவு 09 மணிக்கு அனுராதபுரத்துக்கு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.