மனோஜ் பாரதிராஜா காலமானார்!

26.03.2025 06:23:00

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சற்று முன்னர் காலமானார்.

அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜாவின்  திடீர் மரணமானது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இது அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

48 வயதுடைய அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.