ஹூத்திக் கிளைச்சியாளர்களுக்கு எச்சரிக்கை-டேவிட் கெமரூன்

15.01.2024 06:10:17

அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி கிளர்சசியாளர்களுக்கு  பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும்  ஹூத்தி கிளைச்சியாளர்களை தாக்குதவதைத் தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை  என்றும் அவர்  தெரிவித்தார்.

இதேவளை கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹமாஸ்  கிளைச்சியாளர்கள்   தாக்குதல் நடத்தினர்.

இதனால் கப்பல் நிறுவனங்கள் இப்போது செங்கடல் வழியாகச் செல்லாமல் தென்னாப்பிரிக்காவைச் சுற்றியுள்ள நீண்ட பாதையைப் பயன்படுத்துகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பிரித்தானியா உள்ளிட்ட உலக நாடுகளில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.