ஐ.ம.ச எம்.பிக்கள் கூடுகின்றனர்.

25.08.2025 08:17:32

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் கலந்துரையாட, ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் திங்கட்கிழமை (25) அன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடுகின்றனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய மக்கள் கூட்டணியைச்  சேர்ந்த சகல கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடுவார்கள் என்று கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டு குறித்த தெளிவை எட்டும் வகையிலயே இச்சந்திப்புகள் இடம்பெறுகின்றன. இந்தக் கலந்துரையாடல்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல  கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.