கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜஸ்லாந்தில் 17 ஆயிரம் நிலநடுக்கங்கள்

06.03.2021 10:19:54

 

ஜஸ்லாந்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பல எரிமலைகளால் சூழப்பட்ட ஐரோப்பாவில் சிறிய தீவு நாடாக உள்ள ஜஸ்லாந்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்ற போதிலும் இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மையம் கவலை தெரிவித்துள்ளது.

அதிக அளவிலான எரிமலைகள் உள்ளதால் நிலநடுக்கங்களின் காரணமாக அவற்றில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எண்ணி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.