நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு.

27.10.2026 08:47:02

நடப்பாண்டில் இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இதுவரை நாடளாவிய ரீதியில் மொத்தம் 1,05,295 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

மாகாண ரீதியில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு 54,783 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் மாகாணத்தில் 14,954 பேரும், மத்திய மாகாணத்தில் 10,549 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 8,629 பேரும் பதிவாகியுள்ளனர்.

 

மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் 22,094 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 20,453 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 8,398 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,593 பேரும் பதிவாகியுள்ளனர்.

 

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 29,964 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 4,575 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

தற்போதைய மழைக்கால வானிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான இடங்கள் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.