
வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை!
10.12.2024 08:09:10
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, தற்போது 62 வயதாகும் வைத்தியர் ஒருவரின் ஓய்வு வயது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படும்.