பெண் ஆணவ கொலை : பெற்றோர் கைது
10.01.2024 16:03:28
தஞ்சாவ+ர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ஆணவ கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காரணத்தால் ஐஸ்வர்யாவை துன்புறுத்தி பெற்றோர் ஆணவ கொலை செய்ததாக கணவன் நவீன் அளித்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆதற்கமைய ,தலைமறைவாக இருந்த பெற்றோரை பட்டுக்கோட்டை பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவை கைது செய்த பொலிஸார், பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.