இராணுவத்தால் எங்கள் நாடே இரத்தமாக ஓடியது !

23.05.2022 09:28:57

பேரறிவாளன் விடுதலை தொடர்பில் காங்கிரஸ் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய போது..

"ராஜீவ் காந்தி என்ன தியாகியா? அவர் தானே ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். இராணுவத்தை அனுப்பி 26,000 பேரை அழித்தவர் அவர் தான்" என்று கடுமையாக சாடியிருந்தார்.

"இரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே இரத்தம் வருவது? நீங்கள் அனுப்பிய இராணுவத்தால் எங்கள் நாடே இரத்தமாக ஓடியதே.. அதற்கு என்ன சொல்வது? நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாக இருந்து யோசியுங்கள்". உண்மைபுரியும் என தெரிவித்துள்ளார்