உயிர்வாழும் உரிமையை' உள்ளடக்க வேண்டும்

17.03.2025 08:58:32

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பில் மக்கள் 'உயிர்வாழும் உரிமையை' உள்ளடக்க வேண்டும் என முன்னாள் மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பட்டலந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தமது அறிக்கையில் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. விரிவான சாட்சிகள் கோரப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அரசாங்கம் பட்டலந்த விசாரணை அறிக்கையின் மூல பிரதியை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

பட்டலந்த விசாரணை அறிக்கையில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் ' உயிர்வாழும் உரிமை' உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே உத்தேச புதிய அரசியமைப்பு உருவாக்கத்தின் போது மக்கள் 'உயிர் வாழும்' உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.