அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு !

16.07.2021 10:54:44

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ”சில நேரங்களில் சில மனிதர்கள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார். அதேநேரம் மற்றுமொரு நாயகனாக  அபிஹாசன் நடிக்கவுள்ளார்.

மேலும் ராதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதுடன், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.