மக்கள் பிரச்சனை உனக்கு நக்கலா?!.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த பல நாட்களாவே இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் கோபப்பட்டு அவர்கள் சாலைகளுக்கு வந்து போராடுகிறார்கள். எனவே மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய தமிழக அரசு முயன்று வருகிறது. இந்நிலையில்தான், இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
எதற்கெடுத்தாலும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? இவ்வளவு நாள் மின்சார பிரச்சனை இல்லாமல் ஜாலியாக இருந்தீர்கள்.. இப்போது பிரச்சனை வருகிறது.. ஆறு மாதத்திற்கு பொறுத்துக் கொள்ளக் கூடாதா? தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. நான் சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுப்பது எப்படி என்று தெரிந்து வைத்திருக்கிறேன்.
நீங்க கேள்வி கேட்டா உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா? நீங்கள் கேள்வி கேட்பதை எப்போது நிறுத்துகிறோர்களோ அப்போதுதான் உங்களுக்கு பதிலே கிடைக்கும்’ என அவர் பேசியிருந்தார்
. இதையடுத்து, சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். ‘மக்கள் பிரச்சினை உனக்கு நக்கலாக தெரிகிறதா?’ என்று பலரும் அவரை திட்டி வருகிறார்கள்..
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘இவர் ஹீரோவாக நடித்த எல்லா படங்களுமே படுதோல்வி.. மாஸ்டர் படத்தில் நடித்ததை வைத்து சீன் போட மட்டுமே இவர் லாயக்கு. மொத்த சோஷியல் மீடியாவும் இவரின் அறிவாளித்தனமான பேச்சை ட்ரோல் செய்கிறது’ என பதிவிட்டிருக்கிறார்.