பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா
15.07.2021 10:41:02
சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 இராணுவ வீரர்கள் உள்பட 13பேர் உயிரிழந்தனர். 39க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் சீன நாட்டினர், அமைப்புகள் மற்றும் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பல பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் சீன நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை பிரிவினைவாத குழுக்கள் எதிர்த்துவருகின்றன.
சீனா உதவியுடன் நடைபெறும் திட்டங்களால் உள்ளூர்வாசிகளுக்கு குறைந்த அளவே பலன் கிடைப்பதாகவும், பெரும்பாலான வேலைகள் வெளியாட்களுக்குச் செல்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.