பாலியல் வழக்கு; பிரிட்டன் இளவரசர்

12.10.2021 09:59:06

'பாலியல் புகாரில் சிக்கிஉள்ள இளவரசர் ஆன்ட்ரூ, 61, மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது' என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் போலீசார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டின், இளம் சிறுமியரை பிரிட்டனுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல புகார்கள் உள்ளன. இதற்காக பல நாடுகளில் இருந்து சிறுமியரை கடத்தி வந்து, அவர்களை வளர்த்து, பாலியல் விருந்து நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2019ல் அவர், நியூயார்க் சிறையில் தற்கொலை செய்தார். இந்நிலையில் எப்ஸ்டீன் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், பிரிட்டன் இளவரசர் ஆன்ட்ரூ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த விர்ஜினா கியூபர் என்ற பெண், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.பாலியல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து ஆன்ட்ரூவின் அரச உரிமைகளை, அவருடைய தாயும், பிரிட்டன் ராணியுமான இரண்டாம் எலிசபெத் பறித்தார்.

இந்நிலையில் எப்ஸ்டீன் மீதான விர்ஜினா கியூபரின் புகார் தொடர்பாக மறு விசாரணை முடிந்து விட்டதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும், பிரிட்டன் போலீஸ் கூறியுள்ளது.