யாழ்.மாநகரசபை முதல்வருக்கும் யாழ்.இந்திய துணை தூதரக அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு
04.01.2021 08:15:24
யாழ்.மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கும் யாழ்.இந்திய துணை தூதரகத்தின் அதிகாரி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போது, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சந்திப்பின்போது என்ன விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பாக எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.