தனமல்வில நில அதிர்வு; எந்தவித பாதிப்பும் இல்லை என அறிவிப்பு
26.08.2021 05:49:24
தனமல்வில பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வானது, குறித்த பகுதியின் நிலத்தில் ஏற்பட்டதல்ல என பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நில அதிர்வானது இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலையில், நாட்டில் உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவ்வாறான நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.