சி ஐ ஏ யின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன், தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதருடன் காபூலில் இரகசியப் பேச்சுவார்த்தை

25.08.2021 09:45:26

அமெரிக்க உளவுத்துறை சி ஐ ஏ யின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன், தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதருடன் காபூலில் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சிஐஏ அதிகாரபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.எனினும் 31 ஆம் திகதிக்குப் பின்னர் இறுதிக் கெடுவை நீடிப்பது குறித்து அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு பராதர் சி ஐ ஏவால் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் விடுதலையான அவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.