இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான செயலமர்வு!

24.11.2021 11:26:23

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சி மற்றும் அதற்கான வாழ்வாதார உபகரண உதவித்திட்டத்தினை வழங்குவதற்கான செயலமர்வு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் மூன்றாம் கட்ட பயிற்சிப் பட்டறை நேற்று (23) செஞ்சிலுவை சங்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த திட்டத்திற்காக இதுவரை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலமைந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளவர்களிலிருந்து நேர்முகத்தேர்வினூடாக 18வயது தொடக்கம் 29வயதுக்குட்பட்ட 40 இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தையல், மின்னியல், விவசாயம் துறைசார்ந்த பயிற்சிகளுடன் அவைசார்ந்த உபகரணங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  •