
வேண்டுமென்றே அழிக்கப்பட்ட இ.போ. ச
21.04.2025 11:38:28
இலங்கை போக்குவரத்து சபை வீழ்ச்சியடையவில்லை, அது வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார. |
இரத்தினபுரியில் உள்ள SLTB சப்ரகமுவ பிராந்திய அலுவலகத்தில் டிப்போ மறுசீரமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், "இந்த அழிவு எங்கள் கண் முன்னே நடந்தது" என்று கூறினார். |