பிரித்தானியாவில் மாயமான செவிலியர்

23.10.2024 07:53:47

பிரித்தானியாவில் காணாமல் போன செவிலியரை தேடும் பணியின் போது மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு யார்க்ஷயரின் மால்டன் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கடந்த செப்டம்பர் 30ம் திகதி வெளியேறிய போது கடைசியாக பார்க்கப்பட்ட 34 வயது செவிலியர் விக்டோரியா டெய்லர் (Victoria Taylor) பின்னர் காணாமல் போனார்.

   

கிட்டத்தட்ட செவிலியரின் 3 வார மறைவுக்கு பிறகு, டெர்வென்ட் ஆற்றில் நீருக்கடியில் தேடும் குழுவினர் மனித சடலம் ஒன்றை கண்டெடுத்து இருப்பதாக வடக்கு யார்க்ஷயர் பொலிஸ் உதவி தலைமை ஆய்வாளர் வெய்ன் பாக்ஸ்(Wayne Fox) தகவல் தெரிவித்துள்ளார்.

நீருக்கடியில் தேடும் குழுவினர் கண்டெடுத்த உடல், காணாமல் போன செவிலியர் விக்டோரியா டெய்லரின் தனிப்பட்ட உடைமைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அமைந்திருப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

முறையான அடையாளப்படுத்துதல் நடைபெறவில்லை என்றாலும், விக்டோரியா டெய்லரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர் விக்டோரியா டெய்லர் காணாமல் போனதாக அக்டோபர் 1ம் திகதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார், செவிலியர் விக்டோரியா டெய்லர் தண்ணீர் கரை வழியாக விளையாட்டு பூங்கா நோக்கி நடந்து செல்வதை கண்டுபிடித்தனர்.

2025-ல் இந்தியர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்கும் ஜேர்மனி 2025-ல் இந்தியர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்கும் ஜேர்மனி இதனால், விக்டோரியா டெய்லரை தேடும் பணியில் பொலிஸார் ட்ரோன்கள், நீச்சல் வீரர்கள், சிறப்பு சோனார் கருவிகள் ஆகியவரை பயன்படுத்தினர்.