
விஜய் ஆண்டனியின் திரைப்படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த் ?
28.02.2022 10:05:00
1980 மற்றும் 1990-களில் தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாக வலம் வந்தவர் விஜயகாந்த். பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு நடிகராக நீங்கா இடம்பிடித்தவர். அதன் பிறகு அரசியலுக்கு வந்த காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது மகன் சண்முகபாண்டியனின் முதல் படமான 'சகாப்தம்' படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார். அதன் பிறகு இவர் விஜய் ஆண்டனியின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த தகவலை அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தற்போது உறுதி செய்துள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்து வரும் " மழை பிடிக்காத மனிதன்" என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதை அவர் உறுதி செய்துள்ளர்.