பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து

02.07.2024 08:04:42

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

குறித்த கார் தவறான திசையில் செலுத்தப்பட்டு பாதசாரிகள் மீது மோதுவதற்கு முன்னர் மேலும் 02 வாகனங்களுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் 06 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.