குதிரை பேரம் என்றால் என்ன?

03.07.2026 07:58:02

தமிழக அரசியல் களம் தற்போது த.வெ.க மற்றும் திமுக இடையே காரசாரமான விவாதங்களால் சூடேறியுள்ளது. சமீபத்தில் த.வெ.க-வில் மாற்றுக்கட்சியினர் இணைந்தது குறித்து திமுகவின் சன் டிவி நிருபர் கேள்விகளை முன்வைத்த நிலையில், அதற்குப் பதிலடி தரும் வகையில் பிரவீன் சக்ரவர்த்தி சில அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் பேசுகையில், “பணம் கொடுத்து த.வெ.க எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசினால்தான் அது குதிரை பேரம் ஆகும். ஆனால், தலைவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் பிடித்து, மக்கள் மற்றும் நிர்வாகிகள் தாங்களாகவே விருப்பப்பட்டு த.வெ.க-வில் இணைந்தால் அதை எப்படி குதிரை பேரம் என்று சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து திமுகவை சாடிய அவர், “த.வெ.க-வின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து இப்போது திமுக ஏன் இவ்வளவு பயப்படுகிறது? கடந்த காலத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு என்ன உருப்படியாகச் செய்து வைத்தார்கள்? சாதனைகளைச் சொல்லி அரசியல் செய்யாமல், எதிர்க்கட்சிகளின் சேர்க்கையைப் பார்த்து அச்சப்படுவது ஏன்?” என்று மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். 

த.வெ.க-வின் அரசியல் நகர்வுகளால் ஆளுங்கட்சி தரப்பு கலக்கமடைந்துள்ளதை இவருடைய இந்த உரை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.