ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக ஆர்ப்பாட்டம் - லெபனான்

09.03.2021 08:14:50

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் முடக்குதலில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக லெபனான் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஸூக், ஜல் அல்-டிப் மற்றும் அல்-தவ்ராவிலிருந்து தெற்கே தலைநகர் பெய்ரூட்டுக்குச் செல்லும் மூன்று முக்கிய வீதிகளை நேற்று (திங்கட்கிழமை) மறித்த ஆர்ப்பாட்டங்காரர்கள் டயர்கள் எரித்து எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக எதிர்ப்பாளர்கள் மத்திய வங்கியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்வராததால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று நாங்கள் பலமுறை கூறினோம் என போராட்டக்குழுவினர் கூறுகின்றனர்.

டயர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ஒருவர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதாகவும், பொலிஸார் சரியான நேரத்தில் அவரை தடுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

2019ஆம் ஆண்டு ஆரம்பித்த லெபனானின் நிதி நெருக்கடி, ஆறு மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. வேலை வாய்ப்புகள் மற்றும் மக்களின் சேமிப்புகளை அழித்துவிட்டது. நுகர்வோர் வாங்கும் சக்தியைக் குறைத்துவிட்டது.

பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் பண மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை டொலருக்கு நிகரான லெபனான் பவுண்டின் மதிப்பு 10,000 ஆக வீழ்ச்சியடைந்தது. இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ள நிலையில், பண மதிப்பு இந்த அளவிற்கு குறைந்துபோனதால், எதிர்ப்பாளர்கள் தினமும் வுPதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற