காஷ்மீர் பொலிஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

14.12.2021 09:10:32

இந்தியா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் ஜேவன் பகுதியில் பயங்கரவாதிகள், பொலிஸ் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஷ்மீர் மண்டல பொலிஸ் இந்த பயங்கரவாத தாக்குதலை தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இதில் பொலிஸார் 14 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.