புயலால் கவிழ்ந்த படகு
24.02.2022 16:28:59
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்தரா மாவட்டத்தில் பயணிகளுடன் நதியில் சென்ற படகு இன்று விபத்துக்குள்ளானது. நிர்சாவில் இருந்து ஜாம்தரா நோக்கி சென்றுகொண்டிருந்த படகு, பார்பெண்டியா பாலம் அருகே சென்றபோது, கடுமையான புயல் காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 16 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.