
முக்கிய அணு ஆயுத பரிசோதனை நடத்திய நாடு!
ஈரான், அணு ஆயுதம் உருவாக்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் 'implosion' பரிசோதனைகள் செய்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் அணுஆயுத கண்காணிப்பு அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது. இது அணு ஆயுத தயாரிப்புக்கே உரித்தான பரிசோதனை என்றும், எந்தவொரு குடிமக்கள் பயன்பாட்டுக்கும் அது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. |
1990-களில் ஆரம்பித்து 2003-ல் முடிக்கப்பட்ட ஈரானின் அணுஆயுத திட்டத்திற்குள் பல இம்ப்ளோஷன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக IAEA அறிக்கையில் வெளிவந்துள்ளது. ஆனால் அந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், திட்டப்படங்கள் மற்றும் அறிவியல் ஆவணங்கள் ஆகியவை எங்கே உள்ளன என்பது தெரியவில்லை. இதன் மூலம், ஈரானிடம் இன்னும் அந்த அறிவு மற்றும் வசதிகள் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக 133.8 கிலோ கிராம் (பிப்ரவரி) இருந்து 408.6 கிலோ கிராமாக (மே மாதம்) உயர்ந்துள்ளதாகவும், இது அணு ஆயுதத்துக்கு மிக அருகிலான நிலையாகவும் உள்ளது. இஸ்ரேல் செய்தியாளர் யோனா ஜெரமி பாப் கூறுகையில், “இந்த பரிசோதனைகள், இயரான் யுரேனியம் சுத்திகரிப்பு மட்டுமல்லாமல், அணு குண்டு தயாரிக்க வேண்டிய பிற திறன்களிலும் முன்னேறியுள்ளது என்பதை காட்டுகிறது” என்றார். அயத்துல்லா அலி காமெனெய் ஒப்புதல் அளித்தால், ஈரான் சில மாதங்களில் 'crude' அணு ஆயுதம் உருவாக்கக்கூடிய நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். |