ஆண் மகனாக தோன்றும் வெற்றி!
12.05.2024 07:12:00
நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆண் மகன்' என பெயரிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆண் மகன்' எனும் திரைப்படத்தில் வெற்றி, பிரபு, கிருஷ்ணப்பிரியா, மன்சூர் அலிகான், ஆர் வி. உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நவ்பல் ராஜா இசையமைக்கிறார். ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் கே. எம். ஷபி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.