பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி: ரஜினி

27.10.2021 17:49:48

ஜனாதிபதியையும் ,பிரதமரையும் சந்தித்தது மகிழ்ச்சி'' என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த 67வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன், என ரஜினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்து பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.